ICC டெஸ்ட் குழுவில் இலங்கையின் ரங்கனவுக்கு இடம்!

Friday, December 23rd, 2016

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) உலக கிரிக்கெட் வீரர் குழாமில் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) வருடாந்தம் வெளியிடப்படும் 12 பேரைக் கொண்ட குறித்த வீரர்கள் பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த ஒரேயொரு வீரராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

இது தவிர இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ள ஒரேயொரு வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 5 வீரர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்த 4 பேரும், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் இவ்வணியில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 செப்டெம்பர் 14 முதல் 2016 செப்டெம்பர் 20 வரையான காலப்பகுதியில் வீரர்கள் காட்டிய திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட குறித்த அணி, ராகுல் ட்ராவிட், கெரி கெர்ஸ்டன், குமார் சங்கக்கார ஆகியோரின் மத்தியஸ்தத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அணி எவ்வித போட்டிகளுக்காகவும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதோடு, கிரிக்கெட் வீரர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் சபையால் வருடாந்தம் வெளியிடப்படும் ஒன்றாகும்.

இங்கிலாந்து அணியின் அலஸ்டயர் குக் தலைமையிலான குறித்த அணியின் விபரம் வருமாறு:

  1. டேவிட் வோனர் (அவுஸ்திரேலியா)
  2. அலஸ்டயர் குக் (இங்கிலாந்து)
  3. கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து)
  4. ஜொய் ரூட் (இங்கிலாந்து)
  5. அடம் வொகஸ் (அவுஸ்திரேலியா)
  6. ஜொன்னி பெயார்ஸ்டோ (இங்கிலாந்து) – விக்கெட் காப்பாளர்
  7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து
  8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
  9. ரங்கன ஹேரத் (இலங்கை)
  10. மிச்சல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
  11. டேல் ஸ்டேன் (தென்னாபிரிக்கா)
  12. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

rangana-720x480

Related posts: