முன்னாள் வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கு இதுவரை வீரர்கள் கிடைக்கவில்லை – சனத்!

இலங்கை அணியிலிருந்து ஜவர்த்தன, சங்கக்கார, டில்சான் ஆகியோர் ஓய்வுபெற்ற பின்னர் அவர்களது வெற்றிடத்தை நிரப்புவதற்கு இன்னும் வீரர்கள் கிடைக்கவில்லை என்று அணியின் முன்னாள் வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கிரிக்கட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு பின்னர் வேறு எந்த சுழற்பந்து வீச்சாளர்களும் டெஸ்ட் போட்டி ஒன்றில் 16 விக்கெட்களை வீழ்த்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமின்றி இலங்கை அணியில் மூத்த வீரராக உள்ள ரங்கன ஹேரத் இன்றும் இரண்டு வருடங்கள் அணியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ள ஜயசூரிய அணியில் ஹேரத்தின் செயற்பாடு சிறப்பாக அமைந்துள்ளதாக பாராட்டும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமநிலையை நோக்கி இந்தியா- மேற்கிந்திய தீவுகள் போட்டி!
சஹித் அஜ்மலை புறக்கணிக்கவில்லை - இன்சமாம் உல் ஹக்!
கிரிக்கட் சபை குழுவினால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளுக்கு ஐ.சி.சி அனுமதி!
|
|