சஹித் அஜ்மலை புறக்கணிக்கவில்லை – இன்சமாம் உல் ஹக்!

Friday, October 28th, 2016

 

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹித் அஜ்மலை தேர்வுக்குழு புறக்கணிக்கவில்லை என அணியின் தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ சயீத் அஜ்மலை பாகிஸ்தானின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர். இதனை தேசிய ரி-ருவென்ரி சம்பியன்ஷிப் போட்டியில் அவர் நன்கு வெளிப்படுத்தியிருந்தார். உள்நாட்டு முதல்தர போட்டிகளில் அவருடைய திறமையை நாம் பார்த்தோம். இந்த திறமையான செயற்பாட்டை அவர் தொடர்ந்தும் வெளிப்படுத்தினால் நிச்சயம் தேசிய அணியில் சேர்த்துக் கொள்வது குறித்து அவதானிக்கப்படும்’ என தெரிவித்தார்.

மூவகை கிரிக்கட் தொடர்களிலும் அதிகமான விக்கெட்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தை பெற்ற சஹித் அஜ்மலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு பந்து வீச்சு தடை விதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்ெகட் சபையின் விதிமுறைகளுக்கு முரணாக பந்து வீசுவதாக அவருக்கு பந்து வீச்சு தடை விதிக்கப்பட்டது.

எனினும் அவற்றிலிருந்து மீண்டுவந்த அவருக்கு பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்கிடைப்பது என்பது பெரும் கஷ்டமாகவே உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷிற்கு எதிரான போட்டியே அவருடைய இறுதிப் போட்டியாக அமைந்துள்ளது. அதன் பின்னர் அணியிருந்து புறக்கணிக்கப்படுவதாகவே கருதப்படுகின்றது.

இந்நிலையில் பந்து வீச்சு நடவடிக்கையில் மாற்றங்களுடன் மறுபிரவேசம் என்பது ஒரு பந்து வீச்சாளருக்கு எளிதானது அல்ல என இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

96col135043700_4917203_27102016_aff_cmy

Related posts: