சமநிலையை நோக்கி இந்தியா- மேற்கிந்திய தீவுகள் போட்டி!

Saturday, August 20th, 2016

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முழுவதும் தொடர் மழையினால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் ட்ரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்பார்க்கில் ஓவல் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். இதனிடையே மழை துவங்கியதால் இந்த ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

22 ஓவர்கள் மட்டுமே முதல் நாளில் வீசப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. பிராத்வெயிட் 32 ஓட்டங்களிலும், சாமுவேல்ஸ் 4 ட்டங்களிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ஜான்சன் 9 ஓட்டங்களில் இஷாந்த்சர்மா பந்திலும், பிராவோ 10 ஓட்டங்களில் அஸ்வின் பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. தொடக்கம் முதலே மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்ததால் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது. இதனால் போட்டி டிரா ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

Related posts: