மீண்டும் களமிறங்கும் ஷேவாக்!

Sunday, December 25th, 2016

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அதிரடி வீரரான ஷேவாக் பயிற்சியாளராக அவதாரம் எடுக்க உள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் சஞ்சய் பங்கர். அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.பஞ்சாப் அணியின் சக உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவுடன் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

சஞ்சய் பங்கர் கூறுகையில், பஞ்சாப் அணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்து வரும் ஷேவாக் அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

sehwag(C)

Related posts: