மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகதமையாளர் மொரின்யோ திட்டம்!
Friday, July 21st, 2017
மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளராக, 15 ஆண்டுகளுக்கு இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள ஜொஸே மொரின்யோ, இதற்கு முன்னர் சேர் அலெக்ஸ் பேர்குசனின் காலத்தில் காணப்பட்ட உறுதியை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பேர்குசனின் காலத்தின் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியின் முகாமையாளர் பதவிகள், அடிக்கடி மாற்றமடைந்து வருகின்றன. இந்நிலையிலேயே, தனது 2ஆவது பருவகாலத்திலேயே, நீண்டகாலத் திட்டத்தை, மொரின்யோ வெளிப்படுத்தியுள்ளார்.
முகாமையாளர்களின் பணிகள் தொடர்பாகக் காணப்படும் அழுத்தம் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு இருப்பது கடினமென்பதை ஏற்றுக் கொண்ட மொரின்யோ, எனினும், அணி வெற்றிபெறும் போது, அது சாத்தியமாகுமெனவும் தெரிவித்தார்.
Related posts:
மின்சாரம் தாக்கி மல்யுத்த வீரர் பலி!
இலங்கை அணிக்கு திரும்பினார் நட்சத்திர வீரர்: ஆறுதல் வெற்றி கிடைக்குமா?
லடாக் தாக்குதலின் எதிரொலி : IPL அனுசரணை ஒப்பந்தங்களை மீளாய்வு செய்யும் நிர்வாகம்!
|
|
|


