பாண்ட்யாவை ஏன் இறக்கினோம் – கோஹ்லி விளக்கம்!

Tuesday, June 6th, 2017

நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது, டோனிக்கு, முன்பாக பாண்ட்யாவை களமிறங்கியது ஏன் என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தற்போது சாம்பியன் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பர்மிங்ஹாமில் நடந்த நான்காவது லீக் போட்டியில், இந்தியா அணி, பாகிஸ்தான் அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.இப்போட்டியில், இந்திய வீரர் யுவராஜ் சிங் அவுட்டான பின், டோனி தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார்.

அவரும் கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல், அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இருந்தாலும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், யுவராஜ் சிங் விக்கெட்டுக்கு பின் போட்டியில் வெறும் 10 பந்துகளே மீதம் இருந்ததது. அதனால், டோனிக்கு முன்பாக பாண்ட்யாவை களமிறக்க முடிவு செய்தோம்.

ஐபிஎல் போட்டிகளில் பாண்ட்யா கடைசி நேரங்களில் சிறப்பாக செயல்பட்டார். இதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.அதன்பின் தான் பாண்ட்யா களமிறங்கினார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இதில் டோனிக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Related posts: