பலோன் டி ஓர் விருது குறித்து கவலை இல்லை-நெய்மர்!

Thursday, December 29th, 2016

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான சர்வதேச கால்பந்து சபையின் ‘பலோன் டி ஓர்’ (Ballon D’Or ) விருது கிடைக்காவிடில் உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டேன் என்று பிரேஸில் கால்பந்து அணித்தலைவரும் பார்சிலோ அணியின் நட்சத்திர வீரருமான நெய்மர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே நெய்மர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”பலோன் டி ஓர் விருதுதான் நோக்கம். ஆனால், அந்த விருது கிடைக்காவிட்டால் செத்துவிட மாட்டேன். விருதுகளை விட எப்போதுமே சந்தோசமாக இருக்க விரும்புகிறேன். பாசிலோனா அணியில் சந்தோசமாக இருக்கிறேன். பலோன் டி ஓர் விருதை பெறாவிட்டாலும் எதிலும் மாற்றம் ஏற்படபோவதில்லை.

அந்த விருதுக்காக நான் விளையாடவில்லை. நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். ஒரே ஒரு வீரர்தான் அந்த விருதை வாங்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

கால்பந்தில் சிறந்து விளங்கும் வீரருக்கு ஒவ்வொரு வருடமும் பலோன் டி ஓர் விருது வழங்கப்படுவது வழங்கம். இந்த விருதினை இவ்வருடம் கிறிஸ்ரியானோ ரொனால்டோ பெற்றுக் கொண்டுள்ளார். ரொனால்டோ இவ்விருதினை பெற்றுக் கொள்வது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

colneymar-4-720x480144105039_5109406_27122016_AFF_CMY

Related posts: