பயிற்சிக் குழாமிலிருந்து உமர் அக்மால் நீக்கம்!

Wednesday, May 4th, 2016

இங்­கி­லாந்­துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்  விஜயம் செய்­வ­தற்கு தயா­ராகி வரும் நிலை­யி­லேயே அக்­மாலும் ஷேஹ்­ஸாத்தும் பயிற்சிக் குழா­மி­லி­ருந்து இன்­ஸமாம் நீக்­கி­யுள்ளார்.

ஷஹித் அவ்­றி­டி­யையும் புறக்­க­ணித்­துள்ள தெரி­வா­ளர்கள், இளம் வீரர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்க தீர்மானித்­துள்­ளனர்.

‘‘எல்­லா­வற்­றுக்கும் மேலாக, தெரிவுக் குழு சுயா­தீ­னமா­னது. கிரிக்கெட் சபை எம்மை வழிநடத்தலாம். ஆனால் தெரி­வுக்­குழு தாமா­கவே தீர்­மா­னங்­களை எடுக்கும். பயிற்­றுநர் மற்றும் தெரிவுக் குழு உறுப்­பி­னர்­களின் முன்­னைய அறிக்­கை­களை நான் பார்­வை­யிட்­டுள்ளேன்.

இவை குறித்து அணிக்கு பொறுப்­பா­ன­வர்­க­ளிடம் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன்’’ என லாகூர் கடாபி விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­க­ளு­டான சந்­திப்­பின்­போது இன்­ஸமாம் தெரிவித்துள்ளார்.

அக்­மாலும் ஷேஹ்­ஸாத்தும் அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு அவர்கள் மீண்டும் திற­மையை வெளிப்படுத்­தும்­போது அணியில் சேர்க்­கப்­ப­ட ­வேண்டும்.என உலக இரு­பது 20 போட்­டி­களின் பின்னர் அப்­போ­தைய பயிற்­றுநர் வக்கார் யூனிஸ் அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்தார்.

அவ்­றி­டியின் தலை­மைத்­துவம் குறித்தும் அவர் கார­சா­ர­மான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

உலக இரு­பது 20 போட்­டி­க­ளுடன் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்த அவ்றிடி, சர்­வ­தேச இரு­பது 20 போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தில்லை என்ற தனது தீர்மானத்தையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

‘‘ஒழுக்கம் தொடர்பில் ஏதேனும் பிரச்­சி­னைகள் இருப்பின் அது குறித்து நாங்கள் நட­வ­டிக்கை எடுக்க­வேண்டும். எனவே, ஆற்றல் வெளிப்­பா­டு­க­ளை­விட ஒழுக்­கம்தான் முக்­கியம் என நாங்கள் கரு­து­கின்றோம்.

ஒழுக்கம் சார்ந்த விட­யங்­களில் சிக்­கல்கள் நில­வினால் இந்தத் தெரிவுக் குழு கடு­மை­யான தீர்மானங்­களை எடுக்கும்’’ என அவர் மேலும் கூறி­யுள்ளார்.

‘‘இவ்வருடம் எமக்கு நான்கு சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­க­ளி­லேயே விளை­யாட வேண்டி­யுள்­ளது.

அடுத்து 14 மாதங்­களில் 6 போட்­டி­களே இருக்­கின்­றன. எனவே இந்த ஆறு போட்­டி­களில் புதியவர்களுக்கு சந்தரப்பம் வழங்கவேண்டும் என நான் கருதுகின்றேன்.

ஷஹித் அவ்றிடிக்கு ஓய்வு வழங்கப்படும். அவர் உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தால் அவர் குறித்து கட்டாயம் கவனம் செலுத்தப்படும்’’ என இன்ஸமாம் குறிப்பிட்டார்.

Related posts: