பென் ஸ்டோக்ஸ்-க்கு விருது கொடுத்து கௌரவிக்கும் நியூசிலாந்து?

Saturday, July 20th, 2019

“நியூசிலாந்தர் ஆஃப் தி இயர்” விருதுக்கு இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தை பூர்விகமாக கொண்ட பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் 465 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அதோடு அல்லாமல் இறுதி போட்டியில் 98 பந்துகளில் 84 ரன்களை குவித்து நியூசிலாந்து அணி தோற்பதற்கு முக்கிய காரணியாக விளங்கினார்.

இந்த நிலையில் “நியூசிலாந்தர் ஆஃப் தி இயர்” விருதுக்கு இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்தின் தலைமை நீதிபதி கேமரூன் பென்னட், ஸ்டோக்ஸ் கிறிஸ்ட்சர்ச்சில் பிறந்த காரணத்தால், சிலர் அவரை நியூசிலாந்தின் சொந்தக்காரர் என்று கூற முயற்சிக்கிறார்கள்.

அவர் நியூசிலாந்து அணிக்காக விளையாடவில்லை என்றாலும் கூட, அவருடைய பெற்றோர் இன்னும் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் வசித்து வருகின்றனர். அதனால் அவருக்கு விருது கொடுக்கலாம் என்கிற முடிவில் ஒரு சில நியூசிலாந்து மக்கள் தெளிவாக உள்ளனர்.

அதேசமயம் நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது பெற்ற கேன் வில்லியம்சன் பெயர் பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

Related posts: