கபடியில் தங்கம் வென்றது இலங்கை!

Thursday, March 23rd, 2017

மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றுவரும் சர்வதேச கடற்கரை கபடி போட்டியில் இலங்கை அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு  தங்கப்பதக்கத்தினை வென்றுள்ளது.

சர்வதேச கடற்கரை கபடி போட்டி மொரீஷியஸ் நாட்டு தலைநகரான போட் லொய்ஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியினை எதிர்த்து ஓமான் நாட்டு அணி மோதியது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று சம்பியனானது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மொரீஷியஸ் நாட்டு உப ஜனாதிபதி பீ.பீ.வையா பூரி கௌரவ அதிதியாக மொரீஷியஸ் நாட்டுக்கு விஜயம் செய்துள்ள விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் நாட்டுக்கு சர்வதேச போட்டி ஒன்றில் புகழைப் பெற்றுத்தந்த இலங்கை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ் மொரீஷியஸ் நாட்டு உப ஜனாதிபதியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: