பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி!

Thursday, April 25th, 2019

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட்கோஹ்லி தலைமையிலான பெங்களுரு அணியும் நேருக்குநேர் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 88 ரன்கள் குவித்திருந்தார்.

பஞ்சாப் அணியின் சார்பில் முகம்மது ஷமி, முருகன் அஸ்வின், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹார்டஸ் விலோஜென் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் கூட, ரன்களும் ஏறிக்கொண்டே இருந்தன.

கெய்ல் 23 ரன்களில், லோகேஷ் ராகுல் 42 ரன்களில், மாயன்க் அகர்வால் 35 ரன்களில், அதிரடியாக ஆடிய நிக்கோலஸ் பூரன் 46 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள் என அடுத்தடுத்து முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகள் சரிய கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி திணற ஆரம்பித்தது.

20 ஓவர்களும் முடிவுற்ற நிலையில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 185 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியடைந்தது.

பெங்களூரு அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், நவடிப் சைனி 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மோயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

Related posts: