பங்களாதேஸுக்கு புதிய பயிற்றுவிப்பாளர் !

பங்களாதேஷ் கிரிக்கட் அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் காலிட் மஹ்மட் செயற்படவுள்ளார் என செச்திகள் வெளியாகியுள்ளன.
தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹத்துருசிங்க பதவி விலகல் கடிதத்தை வழங்கியதை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அன்டி ப்ளா, ஜஸ்டின் லாங்கர் போன்றவர்களை பங்களாதேஸுக்கு பயிற்றுவிக்க அணுகப்பட்ட போதும், அது கைகூடவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது ஹத்துருசிங்க பங்களாதேஸ் அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளார் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்தநிலையில் அடுத்தகட்டமாக அவர் இலங்கை அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது
Related posts:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பந்தய மோசடியா?
கப்டன் பதவியை துறக்க தயார் மத்யூஸ்!
பாகிஸ்தானை வெற்றிகொள்ளாத இந்திய அணி எப்படி முதல்தர அணியாகும்? – டீன் ஜோன்ஸ்
|
|