கப்டன் பதவியை துறக்க தயார் மத்யூஸ்!

Saturday, January 21st, 2017

இலங்கைக் கிரிக்கெட்டில் 3 வகைப் போட்டிகளுக்கு தனித்தனி தலைவர்களை நியமிப்பது தொடர்பாக கிரிக்கெட் சபை முடிவெடுத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாரென இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் தோல்விகளுக்கு பயந்து அணித் தலைமைப் பதவியில் இருந்து விலகப் போவதில்லையெனவும் இளம் இலங்கை அணியினால் எவ்வகைப் போட்டியிலும் சாதிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார். அணித் தலைமைப் பதவியில் இருந்து மத்யூஸை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆலோசித்துள்ளதாக கூறப்பவது குறித்து கேட்ட போது மத்யூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கப்டன் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. அணியில் திறமையை பொறுத்தே கப்டன்களாலும் அணியை சரியாக வழிநடத்த முடியும். 100வீதம் ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கும் போது கப்டன் பதவி என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக இராது. பதவிகள் என்பவை தற்காலிகமானவை. நான் கப்டன் பதவியில் இருந்து விலக வேண்டுமென அணி நிர்வாகம் விரும்பினால் அதற்கு நான் தயார். ஆனால் தோல்விகளுக்கு பயந்து கப்டன் பதவியில் இருந்து ஒரு போதும் விலகப்போவதில்லை. இலங்கையில் 3வகை கிரிக்கெட்டிற்கும் தனித்தி கப்டன்களை நியமிப்பது தொடர்பாக கிரிக்கெட் சபை தற்போது நீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவ்வாறானதொரு நிலைப்பாட்டை அணி நிர்வாகம் எடுக்குமாக இருந்தால் தான் கப்டன் பதிவியில் இருந்த விலகத்தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

MaxW640imageVersiondefaultAR-140618808

Related posts: