நெய்மாருக்கு சவால் விடும் மார்க் சக்கர்பெர்க்!

Wednesday, July 20th, 2016

கால்பந்து வீரரான நெய்மாருக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஒரு சவால் விடுத்துள்ளார். ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு வீடியோ மூலம் அந்த சவாலை முன்வைத்துள்ளார் மார்க். இந்த வீடியோ வெளியான 4 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களை தாண்டி வைரலாகியுள்ளது. மார்க் செய்திருக்கும் சவால் நிறையவே ஜாலியானது.

ஃபேஸ்புக்கின் மெஸென்ஜெர் ஆப் மூலம் சாக்கர் (ளழஉஉநச) விளையாட முடியும் இதற்கு ஒருவர் தனது மெஸென்ஜெர் ஆப் மூலம் மற்றவருக்கு கால்பந்து இமோஜியை அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால் அவருடனான ஆட்டம் துவங்கிவிடும். மொபைல் திரையில் விரல்களால் தட்டித் தட்டி பந்தை எவ்வளவு நேரம் அந்தரத்திலேயே வைத்திருக்கிறோம் என்பதுதான் விளையாட்டு.

இதனை ஆடத்துவங்கிய ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்இ ‘மைதானத்தில் நெய்மாருடன் போட்டி போடுவது கடினம்தான். ஆனால்இ மெஸென்ஜெர் ஆப் மூலம் இதனை நான் செய்ய போகிறேன்’ என்று விளையாட ஆரம்பித்து தனது அலுவலக முழுவதும் நடந்துஇ படுத்துஇ உருண்டு விளையாடுகிறார். இறுதியாக 37 புள்ளிகளைப் பெறுகிறார். மேலும் நெய்மாரிடம் நீங்கள் கால்பந்தில் சாம்பியன். ஆனால்இ மெஸன்ஜரில் 37 புள்ளிகளை முந்துவது கடினம். இதை நான் உங்களுக்கு சவாலாகச் சொல்கிறேன்’ என்கிறார் சிரித்துக் கொண்டே நெய்மார் அந்த சவாலை முறியடிப்பாரா?!

Related posts: