மேற்கிந்திய தீவுகளை வெள்ளையடிப்பு செய்த நியூஸிலாந்து அணி!

Wednesday, December 13th, 2017

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற ரீதியில் நியூஸிலாந்து அணி வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் ஹமில்டனில் நிறைவுக்கு வந்துள்ளது, இதனடிப்படையில் இந்த போட்டியில் 240 ஓட்டங்களால் நியூஸிலாந்து ஆணி மிகப்பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்துள்ளது.

இந்தப்போடியைப்பொறுத்தவரை மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவரான ஜன்சன் கோல்டருக்கு, தாமதமான பந்துப்பரிமாற்றம் காரணமாக ஒரு போட்டித்தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பரத் வைட் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது. இதன்படி கழமிறங்கிய நியூஸிலாந்து டாம் லதம் மற்றும் ரவல் ஜோடி சிறந்த ஆரம்பத்தையும் அடித்தளத்தையும் இட்டுக்கொடுத்தது, இதன்படி ரவள் 84 ஓட்டங்களையும், ரவல் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்கள், அணித்தலைவர் வில்லியம்சன் 43 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார், இதன்பின்னராக களமிறங்கிய வீரர்கள் அணியின் மொத்த ஓட்ட எண்ணைக்கையை அதிகரிக்க தவறினர், விக்கட்காப்பாளரான ப்ளூண்டெல் 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார், கடைநிலை பந்துவீச்சாளர்களான ரிம். சவ்தி மற்றும் ரென்ட் போல்ட் 31, 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததன் மூலமாக 373 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது, பந்துவீச்சில் கேப்ரியல் 4விக்கட்டுகளையும், ரோச் 3 விக்கட்டுக்களையும், கம்மின்ஸ் 2 விக்கட்டுகளையும் அதிகப்படியாக கைப்பற்றினார்கள்.

தனது முதல் இனிங்ஸில் துடுப்பாட்ட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பம் முதலே விக்கட்டுக்களை இழந்த நிலையில்  தடுமாற்றத்தோடு ஆரம்பித்தது, அணியின் தற்காலிக தலைவரான பரத்வைட் 66 ஓட்டங்களையும், கெட்மையர் 28 ஓட்டங்களையும், டௌரிச் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார், இதனடிப்படையில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் ரென்ட் 4 விக்கட்டுக்களையும், சவ்தி, வாக்னர், கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா இரு விக்கட்டுகலையும் கைப்பற்றினர்.

152 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த நியுஸிலாந்து அணி ஆரம்ப வீரர்கள் சொத்ப்பிய போதிலும், அணித்தலைவர் வில்லியம்சன் மற்றும் ரோஸ் ரெயிலர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் வலுவான இலக்கொன்றை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயிக்க பேருதவியாக அமைந்தது, வில்லியம்சன் 54 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் ரோஸ் ரெயிலர் ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார், சண்டர் 26 ஓட்டங்களையும், கிராண்ட்ஹோம், சவ்தி ஆகியோர் தலா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்கள் இதனடிப்படையில் மூன்றாம் நாளின் இறுதியில் தனது இரண்டாவது இனிங்ஸை 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 291 ஓட்டங்களோடு மட்டுப்படுத்திய நியூஸிலாந்து அணி, ஆட்டத்தை இடைநிறுத்தி 444 என்ற மிகப்பாரிய வெற்றி இலக்கை மேற்கிந்திய தீவுகளுக்கு நிர்ணயித்தது. மேகிந்திய தீவுகள் சார்பாக கப்ரியல், சேஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும், கம்மின்ஸ் 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

444 என்கின்ற சவாலான வெற்றி இலக்கை, மூன்றாம் நாளில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களுக்கு இரு விக்கட்டுகளை இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. நான்காம் நாளோடு நிறைவுக்கு வந்துவிடும் என்கின்ற எதிர்பார்ப்போடு கழமிறங்கிய நியூஸிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இனிங்சைக்காட்டிலும் குறைவான ஓட்டமான 203 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது. பந்துவீச்சில் சோபித்த ரோஸன் சேஸ் துடுப்பாட்டத்திலும் 64 ஓட்டங்களைக் பெற்றுக்கொடுத்தபோதிலும் ஏனைய வீரர்களின் சொற்ப ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியது. பந்துவீச்சில் வாக்னர் 3 விக்கட்டுகலையும், சண்டர், சவ்தி, போல்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இரண்டு போட்டிகளைக்கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வெள்ளையடிப்பு செய்து மிகவும் சிறப்பான வெற்றி ஒன்றை நியூஸிலாந்து அணி பதிவு செய்தது, இரண்டாவது இனிங்ஸில் சதம் கடந்த ரோஸ் ரெயிலர் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 20ம் திகதி கோபாம் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts: