தோற்றாலும் மகிழும் கிறீமர்!

Friday, August 12th, 2016

சிம்பாப்வே அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தாலும், சிம்பாப்வே அணி வழங்கிய போட்டி குறித்து மகிழ்ச்சியடைவதாக, அதன் தலைவர் கிறேம் கிறீமர் தெரிவித்துள்ளார்.

“நீண்டகாலமாகப் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத போது, டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகையில், சிறிது அதிர்ச்சியாக இருக்கலாம். எனது வீரர்கள், கடுமையாகப் போராடுவார்கள் என எனக்குத் தெரியும்” என அவர் தெரிவித்தார்.

“வீரர்கள், தாங்களாகக் கற்றுக் கொண்டு, போராடுவதைப் பார்க்கும் போது சிறப்பாக இருந்தது. இரண்டு வீரர்கள் சதம் பெறுவதென்பது, சிறப்பானது” என அவர் மேலும் தெரிவித்தார்.

நியூசிலாந்து: 582/4 (டொம் லேதம் 136, றொஸ் டெய்லர் ஆ.இ 124, கேன் வில்லியம்ஸன் 113, மார்ட்டின் கப்டில் 87, பி.ஜே வற்லிங் ஆ.இ 83)

சிம்பாப்வே 362/10 (கிறெய்க் ஏர்வின் 146, பீற்றர் மூர் 71, சமு சிபாபா 60. பந்துவீச்சு: இஷ் சோதி 4, நீல் வக்னர் 2, மிற்சல் சான்ட்னெர் 2.)

நியூசிலாந்து: 166/2 (கேன் வில்லியம்ஸன் ஆ.இ 68, றொஸ் டெய்லர் ஆ.இ 67)

சிம்பாப்வே: 132/10 (டினோ மவாயோ 35. பந்துவீச்சு: மார்ட்டின் கப்டில் 3, இஷ் சோதி 3)

போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்ஸன்

தொடரின் நாயகன்: நீல் வக்னர்

Related posts: