வோகனின் கருத்தால் ஜோ ரூட் வருத்தம்!

Thursday, July 20th, 2017

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்திருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைப்பார் என தான் எதிர்பார்க்கவே இல்லை என அணியின் தலைவர் ஜோ ரூட் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியில் 340 ஓட்டகளால் படுதோல்வியடைந்தது.இதனால் ஆத்திரமடைந்த வோகன் ‘இங்கிலாந்து வீரர்களின் துடுப்பாட்டம் மிகவும் மோசமாக இருந்தது. துடுப்பாட்ட வீரர்களின் துடுப்பாட்டத்தைப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்கவில்லை என்று நினைக்க தோன்றுகிறது.

ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். பந்து வீச்சாளர்கள் அல்லது அணி மோசமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை பற்றி அவர்கள் நினைக்கவேயில்லை” என விமர்சித்திருந்தார்.இந்த விமர்சனத்திற்கு தற்போது பதிலளித்துள்ள இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் கூறுகையில் ”வாகனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல என்று நினைக்கிறேன். வோகன் அப்படி சொல்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்தத் தொடரை கைப்பற்றுவதை நாங்கள் பெறுமையாக நினைக்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக 2வது டெஸ்ட்டில் மோசமாக விளையாடிவிட்டோம்” என கூறினார்.வோகனும் ஜோ ரூட்டின் தந்தை மாட் ஆகிய இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள். ஜோ ரூட் சிறுவனாக இருந்தபோது வாகன் குடும்ப நண்பராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: