வங்கதேச அணியின் மீது கடுப்பான ஜெய சூர்யா!

Monday, March 19th, 2018

வங்கதேச அணி வீரர்கள் மூன்றாம் தரத்தினர் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை-வங்கதேச அணிகள் மோதிய கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இலங்கை பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக இரண்டு பவுன்சர்களை வீசினார்.

இதில் லெக் அம்பயர் நோ-பால் கொடுத்தும், முதன்மை அம்பயர் கவனிக்காததால், கோபப்பட்ட வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை நோக்கில் பெளலியன் திரும்பும் படி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி போட்டி முடிந்த நிலையில வங்கதேசம் இருந்த டிரெஸ்ஸிங் ரூம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சிசிடிவி வீடியோ வைத்து ஐசிசி விசாரணை செய்ய உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி நடந்து கொண்டது வறுத்தமளிக்கின்றது. போட்டியில் இருந்த கடுப்பால் டிரெஸ்ஸிங் ரூம் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது எந்த மாதிரியான மனப்பாங்கு என்று தெரியவில்லை

வங்கதேச வீரர்கள் மூன்றாம் தரத்தினர் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் குறிப்பிட்ட சிறிது நேரத்திலே அதை நீக்கிவிட்டார்.

Related posts: