தெற்காசிய விளையாட்டுப் போட்டி- 3வது இடத்தில் இலங்கை!

Friday, December 6th, 2019


தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தற்போது 3ம் இடத்தில் உள்ளது.

இதுவரையில் 13 தங்கம், 30 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்கள் அடங்களாக மொத்தமாக 92 பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

இந்தியா 50 தங்கம், 35 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன், 103 பதக்கங்களை மொத்தமாக பெற்று 1ம் இடத்தில் உள்ளது.

நேபாளம் 35 தங்கம், 23 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 91 பதக்கங்களை வென்று 2ம் இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் 52 பதக்கங்களுடன் 4ம் இடத்திலும், பங்களாதேஸ் 50 பதக்கங்களுடன் 5ம் இடத்திலும், மாலைத்தீவுகள் 3 பதக்கங்களுடன் 7ம் இடத்திலும் உள்ளன. பூட்டான் 6 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தில் உள்ளது.

Related posts: