தென்னாபிரிக்காவின் வேகப்பந்து புயல் என வர்ணிக்கப்படும் மக்ஹாயா நிட்டினியின் வாரிசு தென்னாபிரிக்க கிரிக்கட்டில்
Wednesday, December 13th, 2017
தென்னாபிரிக்க அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மக்ஹாயா நிட்டினியின் மகன் தென்டோ நிடினி 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ண போட்டிகளுக்கான தென்னாரிக்க குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டிகள் எதிர்வரும் வருடம் நியூஸிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.
17 வயதாகும் தென்டோ நிடினி, முதன்முறையாக 19வயதுக்குட்பட்டோர் உலகக்கிண்ண போட்டிகளுக்கான அணிக்குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளரான தென்டோ நிடினி, இடதுகை துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். இந்த போட்டித் தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் தலைவராக ரெய்னார்ட் வென் டொண்டெர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மக்ஹாயா நிட்டினி போன்று நட்சத்திர வீரராக ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
Related posts:
அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி!
கால்பந்தாட்டத் தொடர்: சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!
பெத்தும் நிஸ்ஸங்க சதம் - அவுஸ்திரேலியாவை மீண்டும் வென்றது இலங்கை அணி!
|
|
|


