தம்புள்ளை வைகிங்ஸ் அணியின் அதிரடியான வெற்றி!

நேற்று நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக்கின் 17வது போட்டியில் காலி கிளேடியேட்டர்ஸ் அணியை தம்புள்ளை வைகிங்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளேடியேட்டர்ஸ் அணி 7 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைகிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களுடன் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
நேற்றைய தின ஆட்டத்தின்போது தம்புள்ளை வைகிங்ஸ் அணியைச் சேர்ந்த சமியுல்லா ஷின்வாரி களத்தில் பிரகாசித்ததோடு தனது அதிரடியான ஆட்டத்தால் வேகமான 46 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்குக் களமமைத்துக் கொடுத்தார். நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் இவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக பெண்கள் டென்னிஸ் தொடரிலிருந்து விலகினார் செரீனா!
இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
பங்களாதேஸ் சுற்றுப்பயணத்தில் இலங்கையின் மற்றுமொரு வீரர் விலகல்!
|
|