டோனி  விட்டுக் கொடுக்க வேண்டும் – வி.வி.எஸ்.லட்சுமன்!

Wednesday, November 8th, 2017

நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது இருபது – 20 போட்டியில் இந்தியாவின் தோல்வியை அடுத்து டோனி இளைஞர்களுக்கு இருபது – 20 வாய்ப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என வி.வி.எஸ்.லட்சுமன் கூறினார்.

நியூசிலாந்திற்கு எதிரான இருபது – 20  போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. அதற்கு டோனியின் சராசரியான ஆட்டமே காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமன் மற்றும் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து லட்சுமன் கூறுகையில் டோனி சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார். அதில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆனால் இருபது – 20 போட்டிகளில் அவரின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. எனவே டோனி இளைஞர்களுக்கு வாய்ப்பை விட்டுக் கொடுக்கலாம். இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியஅணி சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

முன்னாள் வீரர் அகர்கர் பேசுகையில் இந்திய அணி இருபது – 20 போட்டிகளில் புதிய இளம்வீரர்களை சேர்க்க வேண்டும். ஒருநாள் போட்டிகளில் டோனி சிறப்பாக விளையாடுகிறார். கப்டனாக மட்டுமல்ல பட்ஸ்மனாகவும் அவர் சிறப்பாக செயற்பட வேண்டும். அவர் கோலியுடன் இணைந்து ரன்கள் குவித்திருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கும் என கூறினார்.

இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவிருக்கும் மூன்றாவது ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே கோப்பை யாருக்கு? என்பது தெரியவரும்.

Related posts: