கோபா அமெரிக்க கிண்ணத்தை வென்றது சிலி!

Monday, June 27th, 2016

கோபா அமெரிக்க கால்பந்தாட்ட போட்டியின் 2016ஆம் ஆண்டிற்கான சம்பியன் பட்டத்தை சிலி அணி கைப்பற்றியது.

நேற்று (26) நியுயோர்கில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சிலி மற்றும் ஆர்ஜன்டீனா அணிகள் மோதின. நடப்பு செம்பியனான சிலி அணிக்கு கடந்த முறை பெற்ற தோல்விக்கு பதிலடி கொடுக்குமா அர்ஜன்டீனா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு இந்த முறை பெரும் ஏமாற்றம்தான் காத்திருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், போட்டியின் நேரம் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் பெனால்டிக் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பெனால்டிக் வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட சிலி அணி 4-2 என்ற கோல்கணக்கில் சம்பியன் பட்டத்தை தன் வசப்படுத்தியது. ஆர்ஜன்டீனா அணியின் தலைவர் மெஸ்ஸிக்கு கிடைத்த பெனால்டிக் வாய்ப்பை அவர் தவறவிட்டதே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததென விளையாட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Chile-win-the-Copa-America-Centenario-final__3_

Chile-win-the-Copa-America-Centenario-final__2_

Chile-win-the-Copa-America-Centenario-final

copa1

Copa-America-Final-Penalty-shootout__1_

Chile-win-the-Copa-America-Centenario-final__6_

Chile-win-the-Copa-America-Centenario-final__7_

Related posts: