போராடி தோற்ற நடப்புச் சம்பியன்கள்!

Sunday, March 27th, 2016

டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 10 போட்டியின் குருப் 1இல் இங்கிலாந்து இலங்கை அணிகள் நேற்று டெல்லி பெரோஷ் கோட்லா மைதானத்தில் மோதின.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் குவித்தது.

ஜேசன் ராய் 42 ஓட்டங்களும், ஜோ ரூட் 25 ஓட்டங்களும், இயன் மார்கன் 22 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் ஜோஸ் பட்டர் அரைசதம் கடந்து 66 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து 172 ஓட்டங்களுடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. முதல் 4 வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய அஞ்சலா மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 73 ஓட்டங்கள் குவித்தார். மேலும் அதிகபட்சமாக சமரா கபுகேதரா 30 ஓட்டங்களும், திஸ்ஸர பெரேரா 20 ஓட்டங்களும், தசூன் சனாகா 15 ஓட்டங்களும் எடுத்தனர்.

20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டும், டேவிட் வில்லி 2 விக்கெட்டும், பிளங்கட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது

 

Related posts: