டோனிக்கு கிடைத்த மற்றுமொரு அரிய கெளரவம்!

Monday, October 17th, 2016

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 108 வெற்றிகளை பெற்று அதிக வெற்றிகளை பெற்ற 2-வது அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மகேந்திர சிங் டோனி.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக வெற்றிமேல் வெற்றியை குவித்து வருகிறது.

இந்திய அணியின் ராசியான அணித்தலைவர் என்ற பெயரை பெற்றுள்ள டோனி நேற்றைய வெற்றியின் மூலம் மற்றொரு பெருமையை பெற்றுள்ளார்.

டோனி தலைமையில் இந்திய அணி பெறும் 108-வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் சர்வதேச அளவில் அணித்தலைவராக அதிக வெற்றிகள் பெற்ற 2-வது அணித்தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

ஆலன் பார்டர் 107 வெற்றிகளுடன் 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா முன்னாள் அணித்தலைவர் குரோஞ்ச் 99 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணித்தலைவர் பிளம்மிங் 98 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா முன்னாள் அணித்தலைவர் ஸ்மித் 92 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

201606182200050299_Indian-Batsmen-Committed-A-Lot-Of-Errors-Says-MS-Dhoni_SECVPF

Related posts: