சாதனை படைத்த கோஹ்லி!

Monday, December 17th, 2018

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

பெர்த்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் கோஹ்லி 82 ஓட்டங்களுடனும், ரஹானே 51 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த கோஹ்லி பவுண்டரி அடித்து டெஸ்டில் தனது 25வது சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் மிக வேகமாக 25 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். அத்துடன் மேலும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளையும் கோஹ்லி செய்துள்ளார்.

 இந்த சதம் ஒட்டுமொத்தமாக கோஹ்லியின் 63வது சர்வதேச சதம் ஆகும். சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களும், ரிக்கி பாண்டிங் 71 சதங்களும் அடித்து முன்னணியில் உள்ளனர்.

•       2 காலண்டர் ஆண்டில் 11 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.

•       கோஹ்லி தனது 128வது இன்னிங்சில் 25 சதங்களை கடந்துள்ளார். இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர்(130 இன்னிங்ஸ்), சுனில் கவாஸ்கர்(138 இன்னிங்ஸ்) ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். டான் பிராட்மேன் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

•       அவுஸ்திரேலிய மண்ணில் கோஹ்லி அடிக்கும் 6வது சதம் இதுவாகும்.

Related posts: