சமிந்த எரங்கவின் பந்து வீச்சு பாணி முறையானது – ஐசிசி !

Wednesday, July 19th, 2017

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் தற்போதைய பந்து வீச்சு பாணி முறையானது என சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது .

கடந்த வருடம் மே மாதம் 31ம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவரின் பந்து வீச்சு பாணி முறையற்றது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் , சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் புதிய தீர்மானத்தின் படி சமிந்த எரங்கவிற்கு மீண்டும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.சமிந்த எரங்கவின் பந்து வீச்சு பாணி தொடர்பான சிறப்பு பரிசோதனைகள் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தால் சென்னையில் நடாத்தப்பட்டது.இதன்போதே , அவரின் பந்து வீச்சு பாணி தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பந்து வீசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள போதும் , அவரின் பந்து வீச்சு பாணியில் ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டால் அது குறித்து அறிவிப்பதற்கு நடுவர்களுக்கு முடியும் என சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.அதேபோல் , சமிந்த எரங்கவின் பந்து வீச்சு காணொளி மற்றும புகைப்படங்களும் நடுவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.அதன்படி , அவரின் புதிய பந்து வீச்சு பாணி தொடர்பில் நடுவர்கள் அவதானித்து செயற்பட முடியும் என சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது

Related posts: