ரியோ ஒலிம்பிக்கில் புதிய வரலாறு படைத்த பெக்கி!

Friday, August 5th, 2016
ஒலிம்பிக் போட்டிகளில் அதி வேகமாக கோலடித்த வீராங்கனை என்ற சாதனையை கனடாவின் ஜனைன் பெக்கி படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. இதில் சில புதிய சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.ரியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் பிரிவில் ஆறு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் கனடா வீராங்கனை பெக்கி போட்டி ஆரம்பித்த 20 விநாடிகளில் கோலடித்து, ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதி வேகமாக கோலடித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். கனடா இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.இன்னொரு போட்டியில் ஜேர்மனி அணி ஜிம்பாப்வே அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிரான்ஸ் அணி 4 கோல்கள் அடித்து கொலம்பியாவை கதிகலங்க வைத்தது. அமெரிக்காவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.ஸ்வீடனுக்கும், தென் ஆப்பிரிககாவும் இடையிலான போட்டியில் நில்லா பிஷரின் அபாரமான கோல் காரணமாக ஸ்வீடன் வெற்றி பெற்றது. பிரேசில் – சீனா இடையிலான போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Related posts: