டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றது இந்தியா!

Monday, October 3rd, 2016

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வரும் 8 ஆம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. இதற்கிடையே, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளது. முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

iNDIATOUR_lIVEDAY-960x400

Related posts: