5 விக்கட்டுக்களால் வென்றது சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி!

Saturday, March 30th, 2019

ஐ.பி.எல் போட்டிகளில் நேற்று இடம்பெற்ற 8ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணியை எதிர்க்கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல் அணி 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் சஞ்சு சம்சன் 55 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 102 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து 199 என்ற தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

Related posts: