“டியர் விராட் நிறுத்த முடியுமா? – ஆரோன் பின்ஞ்
Friday, May 20th, 2016
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், துணைத்தலைவருமான விராட் கோஹ்லி கிரிக்கெட் உலகை அதிரடியால் அதிரவைத்து வருகிறார்.
இந்திய அணியில் பட்டையை கிளப்பி வரும் அவர், தற்போது ஐபிஎல் தொடரிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளார். இந்த சீசனில் இதுவரை 4 சதங்களை விளாசிய கோஹ்லி 4,002 ஓட்டங்களுடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவின் 3,985 ஓட்டங்கள் சாதனையை அவர் முறியடித்தார்.
இந்நிலையில் குஜராத் அணிக்கு விளையாடி வரும் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஆரோன் பின்ஞ் விராட் கோஹ்லிக்கு ஜாலியாக ஒரு டுவிட் போட்டுள்ளார்.
“டியர் விராட் கோஹ்லி, மிகவும் ஈசியாக துடுப்பெடுத்தாடும் ஸ்டைலை நிறுத்த முடியுமா? இது உலகத்தில் உள்ள மற்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது
நன்றி.”
இவ்வாறு டுவிட்டரில் ஜாலியாக கூறியுள்ளார்.

Dear Virat Kohli,
Can you please stop making batting look so easy, it’s embarrassing for most other batters in the world.
Thanks
— Aaron Finch (@AaronFinch5) 19 May 2016
Related posts:
|
|
|


