டக்வொர்த் லீவிஸ் முறை – ஐசிசி மீது கடும் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில், மழைக்கு பின்னர் பாகிஸ்தானின் வெற்றிக்கு 5 ஓவரில் 136 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற ஐ.சி.சியின் முடிவிற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 336 ஓட்டங்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 140 ஓட்டங்கள் விளாசினார்.
அதனைத் தொடர்ந்து கடினமான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாஹர் ஜமான் (62), பாபர் (48) ஆகியோரின் விக்கெட்டுக்கு பிறகு பாகிஸ்தானின் ஆட்டம் தடுமாறியது.
மேலும், 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 166 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 136 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்று டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்களே எடுத்ததால், 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஐ.சி.சியின் விதிமுறைக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பி.பி.சி கிரிக்கெட் செய்தி தொடர்பாளர் ஜனாதன் ஆனிவ் இதுகுறித்து கூறுகையில், ‘ஐ.சி.சி அறிவிப்பு கேலிக்கூத்தாக உள்ளது. ஒரு முக்கிய தருணத்தில் இப்படி முடிவை கொடுத்தால், அவர்கள் எப்படி முன்னேறுவார்கள்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் பி.சி.சி ரேடியோ பேச்சாளர் ஸ்வான் கூறுகையில், ‘ஒரு ஓவருக்கு 28 ஓட்டங்களை எடுக்க வேண்டும் என்றால் எப்படி முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|