T20 போட்டிகளில் அசுரபலம் காட்டுபவர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்தது பாகிஸ்தான் !

Wednesday, September 28th, 2016

T20 உலக சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 3 வதும் இறுதியான T20 போட்டி அபுதாபியில்  நிறைவுக்கு வந்திருக்கின்றது.

இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று T20 போட்டிகளில் அசுரபலம் காட்டும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர்களை அரபு தேசத்தில் அடிபணிய வைத்து வெள்ளையடிப்பு செய்து தொடரை வென்றது பாகிஸ்தான் அணி.

இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு வழங்கினார்.அதன்படி முதலில் ஆடிய் மேற்கிந்திய தீவுகள் அணி முதலிரு போட்டிகள் போன்று தட்டுத்தடுமாமாறி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களை குவித்தது.

104 எனும் இலகுவான இலக்குடன் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பாடி,15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 3-0 என்று வெற்றி கொண்டது.

ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் 9 விக்கெட்டுக்களாலும், 2 வது T20 போட்டியில் 16 ஓட்டங்களாலும் வெற்றியைப் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியையும் வெற்றிகொண்டு உலக சாம்பியன்களை வெள்ளையடிப்பு செய்திருக்கின்றமை பாரட்டத்தக்கதே.

மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை லாவகமாக பயன்படுத்திய சூழல் பந்துவீச்சாளர் இமாட் வசிம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பாகிஸ்தான் அணியின்  T20 அணித்தலைவராக பொறுப்பேற்றுள்ள விக்கெட் காப்பாளர் சர்ப்ராஸ் அஹமெட், தலைமை தாங்கியுள்ள 4 T20 போட்டிகளிலும் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தே உலக சாம்பியன்கள் எனும் மகுடத்தோடு வலம்வந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, புதிய  அணித்தலைவராக நியமனம் பெற்றுள்ள அதிரடி வீரர் கார்லோஸ் பிரத்வைடின் தலைமையில் மோசமான தொடர் தோல்வியை மேற்கிந்திய தீவுகள் சந்திதிருக்கின்றது.

pak_teamcrick

Related posts: