சாதனை படைத்த தமிழக வீரர்!

Thursday, March 9th, 2017

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டார்க்கின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுள் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலிலும் அஸ்வின் 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். 266 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பிஷன் சிங் பேடியின் முந்தைய சாதனையை அ‌ஷ்வின் முறியடித்துள்ளார்.

இதேபோல நேற்றைய போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், 25ஆவது முறையாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் குறைவான டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Related posts: