ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் அஞ்சல்: உசைன் போல்ட் குழாம் வெற்றி!  

Saturday, August 20th, 2016

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆடவருக்கான 4 x 100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் உசைன் போல்ட் உள்ளிட்ட ஜெமேக்கா குழாம் வெற்றிபெற்று, உலகின் அதிவேக அணியாக தெரிவாகியுள்ளது.

போட்டியில் ஜமெக்கா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரேஸில் உட்பட 8 நாடுகள் பங்குபற்றின.

போட்டியை உசைன் போல்ட் உள்ளிட்ட ஜெமேக்க குழாம் 37 .27 செக்கன்களில் கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது. இது உசைன் போல்ட்டுக்கு ஒன்பதாவது ஒலிம்பிக் தங்கப்பதக்கமாகும்.

அவர் 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் விழாக்களிலும் ஜெமேக்காவுக்கு 4 x 100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் தங்கப்பதக்கத்தை ஈட்டிக்கொடுத்துள்ளார்.

ஜெமேக்க குழாத்தில் உசைன் போல்ட்டை தவிர அசபா பவெல், நிக்கோல் அஷ்மேட், யொஹான் பிளேக் ஆகியோர் இடம்பெற்றனர்.

37.60 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த ஜப்பான் குழாம் வெள்ளிப்பதக்கத்தை அடைந்தது. ஜஸ்டின் கெட்லின், டைசன் கே போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்ற அமெரிக்க குழாம் போட்டி விதிகளை மீறிய காரணத்தால், வெண்கலப் பதக்கம் கனேடிய குழாம் வசமானது.

Related posts: