அனுபவத்தை நேசிக்கும் நியூசிலாந்து!

Thursday, October 13th, 2016

 

“நாங்கள், சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு, எப்போதுமே கற்றுக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட ரீதியிலும் கூட, எனக்கு இந்தியாவில் விளையாடுவது புதிய விடயமாகும்” இதனால் இந்தியாவில் பெறப்பட்ட அனுபவங்களுக்கு தான் நன்றியுடைவராக இருப்பதாகத் நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் பலவற்றில் விளையாடி, ஏராளமான அனுபவத்தைக் கொண்டிருக்காத நியூசிலாந்து அணி, இந்தியாவுக்கெதிரான தொடருக்காக இந்தியா வந்த போது, அவ்வணி மீது பெரியளவான எதிர்பார்ப்புகள் காணப்பட்டிருக்கவில்லை. தற்போது, 3 போட்டிகளையும் தோற்றுள்ள நிலையில், அது தொடர்பாக, அது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவ்வணியின் தலைவர் கேன் வில்லியம்சன், இந்தியாவில் பெறப்பட்ட அனுபவங்களுக்கு, நன்றியுடைவராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்குப் பாராட்டை வெளிப்படுத்திய அவர், “இந்தக் கள நிலைவரங்களை, எங்களை விட அவர்கள், சிறப்பாகப் பயன்படுத்தினர். துடுப்பாட்டத்தில் அவர்கள், மகிவும் பொறுமையாக இருந்தனர். துடுப்பாட்டத்தில் எங்களுக்கு, இலகுவான நிலை காணப்படவில்லை. சிறப்பாகத் துடுப்பெடுத்தாடாமை குறித்து எரிச்சலடைந்து உள்ள போதிலும், இளைய வீரர்களைக் கொண்ட, இந்தக் கள நிலைமைகளில் விளையாட முடிந்தமையால், ஏராளமானவற்றைக் கற்றுக் கொண்டனர்” என்றார்.

டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், டெஸ்ட் தொடரைத் தோற்றமை குறித்து ஏமாற்றமடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

article_1476281880-InLEAD-Near_12102016_GPI

Related posts: