சங்ககாராவிடம் விசாரணை நடத்தப்படுமா?

இலங்கை அணியின் தொடர் தோல்விகள் குறித்து தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்தலாம் என முன்னாள் நட்சத்திர வீரர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் தோல்விகள் குறித்து சங்ககாரா உட்பட ஓய்வுபெற்ற நட்சத்திர வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சங்ககாரா துடுப்பாட்ட வரிசையில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
மேலும் சங்ககாராவின் மேலாளர் சார்லி ஒஸ்டின் இலங்கை அணி விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம்சாட்டும் தரப்புகள் குறிப்பிடுகின்றன.
தமது தரப்பினர் தொடர்பில் தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலையை வெளியிட்ட சங்ககாரா, இவைகள் பற்றி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தன்னிடம் வேண்டும் என்றாலும் விசாரணை நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் வரும் வாய்ப்புகளை பார்த்துக் கொள்ளவே நான் சார்லி ஒஸ்டினை இணைத்துக் கொண்டதாக சங்ககாரா குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|