சக வீரர்கள் நேர்மையாக போட்டியிடவில்லை! – மைக்கல் பெல்ப்ஸ்!
Friday, March 3rd, 2017
போட்டிகளில் பங்கேற்கும் சக வீரர்கள் மோசடியான முறையில் போட்டியிடுவதாக உலகின் முன்னணி நீச்சல் வீரரான மைக்கல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
ஊக்க மருந்துப் பயன்பாட்டு தடை குறித்து அமெரிக்க காங்கிரஸ் சபையினர் முன்னிலையில் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘போட்டிகளில் பங்கேற்கும் வீர வீராங்கனைகள் அனைவரும் நேர்மையாக பங்குபற்றுவதில்லை. தன்னுடன் போட்டியிட்டவர்கள் அனைவரும் நேர்மையாக போட்டியிட்டார்கள் என நான் கருதவில்லை’ என கூறினார். 31 வயதான அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார் வாவ்ரிங்கா !
பாகிஸ்தான் வீரர் ஜம்சத்துக்கு போட்டித் தடை!
மக்களின் இதயங்களை வென்றுள்ளனர் இந்திய மகளிர் அணி- மித்தாலி ராஜ்!
|
|
|


