மக்களின் இதயங்களை வென்றுள்ளனர் இந்திய மகளிர் அணி- மித்தாலி ராஜ்!

Wednesday, July 26th, 2017

2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இறுதிப் போட்டிவரை சென்ற இந்திய அணி வீராங்கனைகள் மக்களின் இதயங்களை வென்றுள்ளனர் என இந்திய அணித்தலைவர் மித்தாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தால் தோல்வியடைந்தது. இறுதிப் போட்டியில் கடுமையாக போராடிய இந்திய அணி தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணித்தலைவர் மித்தாலி ராஜ், ‘ இந்திய மகளிர் கிரிக்கட் அணி உலகக்கிண்ணத்தை வெல்லவில்லை. எனினும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் இதயங்களை வென்றுள்ளது. 18 வருடங்களாக கிரிக்கட் விளையாடுகின்றேன். மக்கள் இப்போது மகளிர் கிரிக்கட் போட்டிகளையும் பார்க்க ஆரம்பித்து விட்டனர். மகளிர் கிரிக்கட் போட்டியை பார்பதற்கு பெருமளவான மக்கள் இம்முறையே வருகை தந்திருந்தனர். அதனை பார்க்கும்போது வித்தியாசமான உணர்வாக இருந்தது. ‘ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மகளிர் கிரிக்கட் வீராங்கனைகளை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்றும் மித்தாலி ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: