இலங்கைக்கு நேரிட்ட சோதனை!

Sunday, January 15th, 2017

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இலங்கை அணிகளுக்கும் தென்னாபிரிக்கா இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்து தொடரை முற்றுமுழுதாக இழந்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்கள் குவித்தது. அம்லா 134 ஓட்டங்களும், டுமினி 155 ஓட்டங்களும் குவித்தனர்.

இலங்கை அணி சார்பில் பிரதீப் மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 45.4 ஓவர்களை மட்டுமே சந்தித்து 131 ஓட்டங்களில் சுருண்டது.

தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பிளாண்டர், ரபாடா ஆகுயோர் தலா நான்கு விக்கெட்டுக்களும், பர்னெல் மற்றும் ஆலிவியர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள். தென்ஆப்பிரிக்காவை விட இலங்கை அணி முதல் இன்னிங்சில் 295 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் பாலோ-ஆன் ஆகியது. தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டுபிளிசிஸ் பாலோ-ஆன் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் திணறியது.அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 42.3 ஓவரிலே இலங்கை 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 118 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக கருணாரத்னே (50) அரைசதமும், சுரங்க லக்மல் 31 ஓட்டங்களும் குவித்தனர்.தென் ஆப்பிரிக்கா அணியில் வெய்ன் பர்னெல் 4 விக்கெட்டும் ஆலிவியர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி உள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: