இந்தியன் ப்ரீமியர் லீக் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணி வெற்றி !

Wednesday, April 17th, 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சுனில் நரேன் 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 224 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 107 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோஸ் பட்லர் தெரிவானமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: