இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி

Wednesday, June 7th, 2017

ஐசிசி சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

காடிவ் சோபியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்கள் 3 பந்துகள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 310 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோ றூட் 64 ஓட்டங்களையும், அலெக்ஸ் ஹேய்ல் 56 ஓட்ட்ங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 44 ஓவர்கள் 3 பந்துகள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் கேன் வில்லியம்ஸ் 87 ஓட்டங்களைப் பெற்றார்.தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் பெறுபேறுக்கு அமைய பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி 4 புள்ளிகளைப் பெற்று ஏ பிரிவில் முன்னணி வகிக்கின்றது. ஒரு போட்டியில் பங்கேற்று இந்திய அணி பி பிரிவில் 2 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றது.

பி பிரிவின் மற்றுமொரு போட்டி பாகிஸ்தான் – மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகும்.

Related posts: