இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 60% இழப்பீட்டை வழங்குமாறு பாகிஸ்தானுக்கு ஐசிசி உத்தரவு!

Thursday, December 20th, 2018

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இழப்பீடு கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கில், பாகிஸ்தானுக்கு 60% இழப்பீடு தொகையை செலுத்துமாறு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

2013 முதல் 2022 வரை இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 6 சுற்றுலாப் பயணங்கள் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தன.

இறுதியாக 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பிறகு இரு அணிகளும், நாடுகளுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவில்லை.

இருதரப்பு நாடுகளுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தங்களை மீறி தங்கள் நாட்டு அணியுடன் கிரிக்கெட் விளையாட பிசிசிஐ மறுப்பு தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும், இழப்பீடாக 490 கோடி ரூபாய் கோரியிருந்தது. அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கினை ஐசிசி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கினை நடத்தியதற்கான செலவில் 60 சதவிகிதத்தை இழப்பீடு கேட்டு இந்திய அணி முறையிட்டது. இதனை ஏற்ற ஐசிசி தீர்ப்பாயம், இழப்பீட்டு தொகையை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Related posts: