ஆரம்பமானது வடமாகாண விளையாட்டுப் போட்டி!

Friday, July 15th, 2016

வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், வட மாகாண பாடசாலைகளின் வீர, வீராங்கனைகளுக்கிடையிலான தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (14) முதல் ஆரம்பமாகியது.

இன்றை ஆரம்ப நிகழ்வு வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு திணைக்களத்தின் செயலாளர் ஆர்.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய துணைத்தூதர்  ஆ.நடராஜன் கலந்துகொண்டார்.

இந்த விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. ஐந்து நாட்களிலும் 258 மைதான மற்றும் தடகள போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தெரிவு, அரையிறுதி மற்றும் இறுதி என்ற ரீதியில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

வடமாகாணப் பாடசாலைகளின் விளையாட்டுப் போட்டியில் பெரு விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், தற்போது தடகள மற்றும் மைதான நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இந்தப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள் தங்குவதற்கான இடங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட வீரர்கள் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும், வீராங்கனைகள் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், மன்னார் மாவட்ட வீரர்கள் சென்.பற்றிக்ஸ் கல்லூரியிலும், வீராங்கனைகள் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையிலும், முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் சென்.ஜோன்ஸ் கல்லூரியிலும், வீராங்கனைகள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும், கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், வீராங்கனைகள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

article_1468494417-DSC_0681

article_1468494464-DSC_0669

Related posts: