பிரபல கிரிக்கட் வீரருக்கு அபராதப்புள்ளி மற்றும் எச்சரிக்கை!
Tuesday, August 7th, 2018
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வீரர் அஷ்லி நர்ஸிற்கு ஒரு அபராதப்புள்ளி வழங்கப்பட்டுள்ளதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியின் போது, அவர் தகாத வார்த்தைகளைப் பிரயோகித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அவர் சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை உறுதியானதை அடுத்து, அவர் மீது அபராதப் புள்ளியும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வருடம் ஜுன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றின் போது எதிர்ப்பை வெளிப்படுத்தியமைக்காக அவருக்கு ஒரு அபராதப்புள்ளி விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலைவர் பதவியை துறக்கும் மலிங்கா
உடற்தகுதி பெறாத வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்படார்!
இலங்கை - மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி நிறைவு!
|
|
|


