கோலூன்றிப் பாய்தலில் மகாஜனாக் கல்லூரி மாணவி புதிய சாதனை!
Thursday, September 15th, 2016
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவியான அனித்தா கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்வி பயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார்.
இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts:
விம்பிள்டன் தொடர்: அரையிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!
முரளிதரன் சிறந்த பந்துவிச்சாளர் ஆனால் அஸ்வின் பந்துவீச்சு வேறு - திலன் சமரவீரா!
பாகிஸ்தானுக்குச் செல்ல இலங்கை அணி தீர்மானம்!
|
|
|


