கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை

Friday, April 29th, 2016

கொல்கத்தா அணிக்கெதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

9வது ஐபிஎல் தொடரின் நேற்றைய 24வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரரகளான ராபின் உத்தப்பா 36 ஓட்டங்களும், அணித்தலைவர் கம்பீர் அரைசதம் கடந்து 59 ஓட்டங்களும் எடுத்தனர்.அடுத்து களமிறங்கிய ஷகிப் அல்ஹசன் 6 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ் 21 ஓட்டங்களும், ஆண்டி ரஸ்ஸல் 22 ஓட்டங்களும், கிறிஸ் லைன் 10 ஓட்டங்களும், யூசுப் பதான் 19 ஓட்டங்களும் எடுத்துள்ளனர்.

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களும் எடுத்தது.பந்துவீச்சில் மும்பை சார்பில் சவுத்தி 2 விக்கெட்டும், ஹர்பஜன், ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 175 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஆட்டமிழக்காமல் அணித்தலைவர் ரோகித் ஷர்மா அரைசதம் கடந்து 68 ஓட்டங்களும், அம்பதி ராயுடு 32 ஓட்டங்களும், ஆட்டமிழக்காமல் பொல்லார்டு 51 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷகிப் அல்ஹசன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக மும்பை அணியின் ரோகித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: