நாதன் மெக்குலம் ஓய்வு!

Friday, April 1st, 2016

நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஒருவரான நாதன் மெக்குலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் சார்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமான நாதன் மெக்குல்லம் இதுவரை 84 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தனது சகோதரர் பிரண்டன் மெக்குல்லத்தை போல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக நாதன் மெக்குலம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் தனது நியூசிலாந்து அணியின் ஜெர்சியின் படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டுள்ளதாவது கடந்த பல ஆண்டுகளாக இந்த ஆடையை அணிந்தது சிறப்பாகவும் கௌரவமாகவும் இருந்தது. எனது சக வீரர்களுக்கு நன்றி சொல்ல போதிய வார்த்தைகள் இல்லை.அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உலக கிண்ணம் தொடரில் மிட்செல் மற்றும் சவுதியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நியூசிலாந்தின் சக வீரர்கள் நாதன் மெக்குல்லத்தின் இந்த முடிவுக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

Related posts: