கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இல்லை – முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்த விளையாட்டுத்துறை அமைச்சர்!
Saturday, October 28th, 2023
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நிராகரித்துள்ளதுடன், இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி) விளக்கமளித்து கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையில் தாம் அரசியல் தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அல்லது இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை கிரிக்கெட் சபையில் எந்தவித அரசியல் தலையீடும் செய்யப்படவில்லை என உறுதியளித்துள்ள விளையாட்டு அமைச்சர், இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலிறுதி சுற்றுக்கு அண்டி மரே முன்னேற்றம் !
மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை - மின்சக்தி மற்றும் சக்திவள அமைச்சு!
வீழ்ச்சி அடைந்த நாட்டினது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் கடுமையாக உழைத்துள்...
|
|
|


